தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஸ்டேக்கில் பிரச்சினை.. டோல்கேட் சூறையாடல்.. மகாராஷ்டிர நவநிர்மன் சேனா தொண்டர்கள் அட்டூழியம்? - டோல்கேட் சூறையாடல்

மகாராஷ்டிர நவநிர்மன் சேனா கட்சியின் தலைவரும் அந்த கட்சியின் நிறுவனரான ராஜ் தாக்ரேவின் மகன் அமித் தாக்ரே சென்ற காரை தடுத்து நிறுத்தியதாக நாசிக் நகரில் உள்ள கோண்டே டோல்கேட்டை அவரது ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கியதாக வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

MNS party
MNS party

By

Published : Jul 23, 2023, 4:27 PM IST

நாசிக் : மகாராஷ்டிர நவநிர்மன் சேனா கட்சியின் நிறுவனர் ராஜ் தாக்ரேவின் மகன் அமித் தாக்ரேவை தடுத்து நிறுத்தியதாக கூறி, அவரது ஆதர்வாளர்கள் டோல்கேட்டை அடித்து நொறுக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மகாராஷ்டிர நவநிர்மன் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்ரே. அவரது மகன் அமித் தாக்ரே, அகமதுநகரில் உள்ள கட்சி உறுப்பினர்களை சந்தித்து விட்டு கடந்த சனிக்கிழமை இரவு மும்பை நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது நாஷிக் அடுத்த கோண்டே டோல்கேட்டை அவரது கார் கடந்து செல்ல முயற்சித்த போது பாஸ்டேக்கில் குளறுபடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அமித் தாக்ரேவின் காரை நிறுத்திய டோல்கேட் பணியாளர்கள், அவர் உள்பட மற்றவர்களிடம் விசாரணை நடத்தியதாக கூறப்பாடுகிறது. மேலும், அமித் தாக்ரே மற்றும் அவரது சகாக்களிடம் டோல்கேட் பணியாளர்கள் அடையாள அட்டையை காண்பிக்குமாறு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து அமித் தாக்ரேவின் கார் டோல்கேட்டை கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை டோல்கேட்டிற்கு புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த கண்ணாடி கூண்டு உள்ளிட்ட அனைத்தையும் அடித்து நொறுக்கத் தொடங்கினர்.

திடீர் தாக்குதலால் பதறிப்போன டோல்கேட் ஊழியர்கள் அங்கிருந்து தப்பி தலைமறைவாகினர். டோல்கேட்டிற்கு புகுந்த கும்பல் கோஷங்களை எழுப்பியபடி அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தப்ப முயன்ற டோல்கேட் பணியாளர் ஒருவரை அடித்து மன்னிப்பு கோர வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிர நவநிர்மன் சேனா கட்சியின் தொண்டர்கள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், தங்களுக்கு இது குறித்து எந்த புகார்களும் தெரிவிக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இருப்பினும் வீடியோ ஆதாரங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை கொண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக வாவி போலீசார் தெரிவித்து உள்ளனர். டோல்கேட் தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைராலகி வருகின்றன.

இதையும் படிங்க :ட்விட்டர் லோகோவை மாற்ற திட்டம்? எலான் மஸ்கின் புதிய 'X' logo!

ABOUT THE AUTHOR

...view details