மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சார்க்கோப் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், சிலர் இணையத்தொடர் படிப்பிடிப்பு நடத்துவதாகக் கூறி, ஆபாசப் படம் எடுத்து வந்ததாகத் தெரிகிறது. இவர்கள், இணையத்தொடரில் நடிக்க வைப்பதாகக்கூறி, நடிகை ஒருவரை அழைத்துச்சென்று, ஆபாசப் படத்தில் நடிக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.
இணையத்தொடர் என்ற பேரில் ஆபாசப் படம் எடுத்த கும்பல் - ஒருவர் கைது! - நடிகை புகார்
மும்பையில் இணையத்தொடரில் நடிக்க வைப்பதாகக் கூறி, நடிகையை ஆபாசப் படத்தில் நடிக்க வைத்த நபரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் மூவரைத் தேடி வருகின்றனர்.
One
இதுதொடர்பாக நான்கு பேர் மீது அந்த நடிகை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த சார்க்கோப் போலீசார், ஒருவரை கைது செய்தனர். மேலும் மூவரைத் தேடி வருகின்றனர்.