மகாராஷ்டிராவை சேர்ந்த 22 வயதான டிக்டாக் நடிகையும் மாடலுமான பூஜா சவான் கடந்த 8ஆம்(பிப்.8) தேதி பூனேவில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பின் பால்கனிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலையில் ஆளும் சிவசேனா அரசின் அமைச்சரான சஞ்சய் ரதோட் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது.
அமைச்சர் சஞ்சய் ரதோட் பதவி விலகக்கோரி மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாநில பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார்.