மகாராஷ்டிரா உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக்குக்கு எதிராக முன்னாள் மும்பை காவல் ஆணையர் பரம் பீர் சிங் பரபரப்பு ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினார். அந்தப் புகாரில், “மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் செய்து கொடுக்க வேண்டும் என்று அனில் தேஷ்முக் நெருக்கடி கொடுக்கிறார்” எனத் தெரிவித்திருந்தார்.
மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ராஜினாமா! - அனில் தேஷ்முக் ராஜினாமா
14:55 April 05
மும்பை: மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்குக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு மீது விசாரணை நடத்த சிபிஐக்கு மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், தனது அமைச்சர் பதவியை தேஷ்முக் ராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து, பரம் பீர் சிங்கின் குற்றச்சாடு குறித்து 15 நாள்களுக்குள் விசாரணை செய்ய சிபிஐக்கு மும்பை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்நிலையில், தார்மீக ரீதியாக பதவி விலகுவதாக கூறி மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர் அமைச்சரவைக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அமைச்சராக தொடர விருப்பமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டை தொடர்ந்து கடந்த பல நாள்களாக, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய அவர் மறுத்துவந்தார்.
இந்த ஊழல் குற்றச்சாட்டால் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணிக்கிடையே மாற்று கருத்து நிலவிவந்தது குறிப்பிடத்தக்கது.