மகாராஷ்டிரா: அந்தேரி மேற்கு பகுதியில் சில நாட்களுக்கு முன் ஓடும் பேருந்தில் இருந்து முதியவர் திடீரென குதித்தார். இதனால் அவரது காலில் பேருந்தின் பின்புற சக்கரங்கள் ஏறின. இதனால் காயமடைந்த அந்த முதியவர் உயிரிழந்தார். இதனையடுத்து இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
ஓடும் பேருந்தில் இருந்து குதித்த நபர் உயிரிழப்பு! - Abdul Gaffar Ismail Sayyed
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதியவர் ஒருவர் ஓடும் பேருந்தில் இருந்து குதித்ததால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா; ஓடும் பேருந்தில் இருந்து குதித்த முதியவர் உயிரிழப்பு
இச்சம்பவம் குறித்து மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் இறந்த நபர் 59 வயதுடைய அப்துல் கஃபர் இஸ்மாயில் சையத் என்பது தெரியவந்தது. இந்நிலையில் அவரது குடும்பத்தாரிடம் சையத்தின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:OTP இல்லாமல் மிஸ்டு கால் மூலம் ரூ.50 லட்சம் திருட்டு.. பொதுமக்கள் உஷார்!