தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்பையில் நிலச்சரிவு: 36 பேர் உயிரிழப்பு! - மும்பையில் நிலச்சரிவு

மேற்கு மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட நிலச்சரிவில், இருவர் காணாமல் போயுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளுக்கு பலத்த மழை பெய்வது இடையூறாக உள்ளது.

Maharashtra
Maharashtra

By

Published : Jul 23, 2021, 2:58 PM IST

மும்பையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிலச்சரிவு

மகராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. கோலப்பூர் மாவட்டத்தில் உள்ள 47 கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், அக்கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன. அங்கிருந்த 965 குடும்பங்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன. ராய்காட்டில் நான்கு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அம்மாவட்டங்களில் உள்ள அணைகளில் நீர் மட்டம் உயர்ந்த வண்ணமே உள்ளது.

உத்தவ் தாக்கரேவின் உத்தரவு

ரத்னகிரி, ராய்காட் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள நிலவரத்தை கட்டுப்படுத்த அவசரக்கூட்டத்தை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நேற்று நடத்தினார். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளை துரிதப்படுத்த பேரிடர் மேலாண்மை குழுவினர், சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதிக மழை, வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு செய்யும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். மேலும், பாதிப்புகள், நிலவரம் குறித்து உத்தவ் தாக்கரேவை தொடர்பு கொண்டு அவர் பேசியுள்ளார்.

மும்பையில் நிலச்சரிவு: 36 பேர் உயிரிழப்பு!

மீட்புப்பணியில் தொய்வு

மேற்கு மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட நிலச்சரிவில், இருவர் காணாமல் போயுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளுக்கு பலத்த மழை பெய்வது இடையூறாக உள்ளது. மேலும், அதே இடத்தில் மீண்டும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வார பாதிப்பு

மழை காரணமாக மும்பை, தானே, நவிமும்பை, பல்ஹர் உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதோடு, கால்வாய்களிலும் அடைப்பு ஏற்பட்டது. சியோன், செம்பூர், காந்தி மார்க்கெட், அந்தேரி மார்க்கெட், ஆர்சிஎப் காலனி, எல்பிஎஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

மும்பையில் சியோன் ரயில்வே நிலைய ரயில் பாதை உள்ளிட்ட முக்கிய ரயில் பாதைகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால், தாதர், பரேல், மாட்டுங்கா, குர்லா, சியோன் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

கனமழை காரணமாக செம்பூர் பாரத் நகரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். விக்ரோலி பகுதியில் குடியிருப்பு பகுதியின் சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பாண்டூப் எனும் புறநகர்ப் பகுதியில் வனத்துறை அலுவலகத்தின் சுவர் இடிந்து 16 வயது சிறுவன் உயிரிழந்தார்.

இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் நிலச்சரிவு: சிக்கியிருக்கும் 400 பேர்

ABOUT THE AUTHOR

...view details