தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்பையில் எஃகு மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சோதனை... 13 மணி நேரமாக எண்ணப்பட்ட பணம்... - IT department seizes in Mumbai

மகாராஷ்டிராவில் எஃகு மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ. 56 கோடி பணம், ரூ.14 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

maharashtra-it-dept-seizes-rs-56-cr-cash-rs-14-cr-worth-jewellery-during-raids-in-jalna
maharashtra-it-dept-seizes-rs-56-cr-cash-rs-14-cr-worth-jewellery-during-raids-in-jalna

By

Published : Aug 11, 2022, 5:39 PM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்ட எஃகு மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீது பல்வேறு வரி ஏய்ப்பு புகார்கள் வந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் வருமான வரித்துறை அலுவலர்கள் மும்பையில் இரண்டு நிறுவனங்களுக்கும் சொந்தமான பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் ரூ. 56 கோடி பணம், ரூ.14 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.390 கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வருமான வரித்துறை அலுவலர்கள் தரப்பில், கடந்த 8 நாள்களாக சோதனைகள் நடத்தப்பட்டன.

ரூ.56 கோடி மதிப்புள்ள பணத்தை எண்ணுவதற்கு 13 மணி நேரமானது. இதில் 32 கிலோ தங்கம் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரிசோதனை நடத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கச்சா எண்ணெய் விலை உயர்வு

ABOUT THE AUTHOR

...view details