மும்பை: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையில் இரண்டு அடுக்கு பேருந்துகள் (double decker buses) இயங்கியது. ஆனால் சில ஆண்டுகளாக பேருந்துகளின் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மும்பையில் இரண்டு அடுக்கு பேருந்துகள் (double decker buses) இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மும்பையில் ஏசி பொருத்தப்பட்ட 900 மின்சார இரண்டடுக்கு பேருந்துகள் (electric double decker buses) குத்தகையில் வாங்குவதற்கு ஒப்பந்தமிட்டுள்ளதாக அம்மாநில சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சிறந்த டபுள் டெக்கர், இப்போது எலக்ட்ரிகில் கொண்டுவரப்படவுள்ளது. முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும், நானும் மும்பையின் சின்னமான டபுள் டெக்கர் பேருந்துகளை புதுப்பிப்பதில் தனிப்பட்ட முறையில் ஆர்வமாக உள்ளோம். எங்களின் பரிந்துரையை மதித்த BEST குழுவின் தலைவர் ஆஷிஷ் செம்பர்க், ஜிஎம் லோகேஷ் சந்திரா மற்றும் BEST குழுவிற்கு நன்றி தெரிவிக்கிறேன்.