நாட்டில் கரோனா 2ஆம் அலை உச்சத்தில் உள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலம் தான் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
வைரஸ் பரவலைத் தடுத்திட, கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி இரவு 8 மணி முதல் மே 1ஆம் தேதி காலை 7 மணி வரை கடுமையான கோவிட்-19 கட்டுப்பாடுகள் அடங்கிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான கேபினட் கூட்டத்தில், உறுப்பினர்கள் பலரும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு, தற்போது அமலில் இருக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் அடங்கிய ஊரடங்கு, மே 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:தேர்தல் பணியில் ஈடுபட்ட 577 ஆசிரியர்கள் உயிரிழப்பு