கரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாக பரவ ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக வடமாநிலங்களில் நிலைமை கையை மீறி சென்றுகொண்டிருக்கிறது. இதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கிறது.
கரோனா: மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு - lock down in maharashtra
மும்பை: கரோனா வைரஸின் இரண்டாம் அலை காரணமாக மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வரவிருக்கிறது.
ட்ச
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா வைரஸ் காரணமாக முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இன்று இரவு எட்டு மணியிலிருந்து மே மாதம் ஒன்றாம் தேதிவரை ஊரடங்கானது அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை நிலவரப்படி அம்மாநிலத்தில், 67, 468 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. அதேபோல், நேற்று மட்டும் 568 பேர் உயிரிழந்துள்ளனர்.
Last Updated : Apr 22, 2021, 3:35 AM IST