தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்பை-புனே நெடுஞ்சாலையில் வாகன விபத்து: 5 பேர் உயிரிழப்பு - ம்பை-புனே நெடுஞ்சாலையில் விபத்து

மகாராஷ்டிராவில் மும்பை-புனே நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

Maharashtra: Five killed and at least five injured in a collision between multiple vehicles
Maharashtra: Five killed and at least five injured in a collision between multiple vehicles

By

Published : Feb 16, 2021, 9:21 AM IST

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பை-புனே நெடுஞ்சாலை அருகே உள்ள கோபோலி என்னும் இடத்தில் நள்ளிரவில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து பார்த்தபோது, மும்பை-புனே நெடுஞ்சாலையில், கார், கனரக வாகனம் உள்ளிட்ட சில வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது தெரியவந்துள்ளது.

விபத்தில் சிக்கிய வாகனம்

உடனே, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியினைத் துரிதப்படுத்தினர். அப்போது, விபத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

தொடர்ந்து உயிரிழந்தவர்களின் சடலம் உடற்கூராய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. காவல் துறையினர் இந்தக் கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details