தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாசிக் மருத்துவனை ஆக்சிஜன் குறைபாடு மரணங்கள் - எஃப்.ஐ.ஆர் பதிவு! - நாசிக் மருத்துவமனை விபத்து

நாசிக் மருத்துவமனையில் ஏற்பட்ட பிராண வாயு கசிவினால் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக பத்திரகாளி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

FIR registered in Nashik hospital tragedy
FIR registered in Nashik hospital tragedy

By

Published : Apr 23, 2021, 9:42 AM IST

மும்பை:பிராண வாயு குறைபாட்டால் கரோனா நோயாளிகள் 22 பேர் உயிரிழந்தது தொடர்பாக காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சோகச் சம்பவம் நாசிக் நகராட்சி நிர்வாகம் நடத்திவரும் டாக்டர் ஜாகிர் உசைன் மருத்துவமனையில் நிகழ்ந்தது. இதில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். செயற்கை சுவாச கருவிகளுக்கு செலுத்தும் பிராண வாயு சேமிப்பு டேங்கில் கசிவு ஏற்பட்டதால் இச்சம்பவம் நேர்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இச்சம்பவம் தொடர்பாக பத்ரகாளி காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 304-ஏ (அலட்சியம் காரணமாக மரணத்தை ஏற்படுத்துவது) இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details