மும்பை:மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள நல்லசோபராவில் 20 வயது இளம்பெண் கரிஷ்மா அலி மற்றும் அவரது காதலன் கலாம் கான் மீது ஆசிட் வீசிய முன்னாள் காதலனையும் கணவனையும் போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் தரப்பில், பால்கர் மாவட்டத்தை சேர்ந்த கரிஷ்மா அலி என்பவருக்கும் தௌபிக் இத்ரிஸ் என்பவருக்கும் கடந்தாண்டு திருணம் நடந்தது.
அதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அப்போது கரிஷ்மாவுக்கும் கம்ரான் அன்சாரி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்துவந்தனர். அதன்பின் அவரையும் கரிஷ்மா பிரிந்தார். மூன்றாவதாக நல்லசோபாராவை கலாம் கான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் லிவ்-இன் உறவில் வாழ்ந்துவந்தனர்.