தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தடுப்பூசி செலுத்தியும் பலி... அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் டெல்டா ப்ளஸ் கரோனா! - அதிக பாதிப்பை ஏற்படுத்தும் டெல்டா ப்ளஸ் கரோனா

மகாராஷ்டிரா மாநிலத்தில் ’டெல்டா ப்ளஸ்’ வகை கரோனா தொற்றால் இதுவரை 66 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் நான்கு பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டெல்டா ப்ளஸ் கரோனா
டெல்டா ப்ளஸ் கரோனா

By

Published : Aug 14, 2021, 12:16 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 66 பேருக்கு ’டெல்டா ப்ளஸ்’ வகை கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில் ரத்னகிரி பகுதியில் இருந்து இருவர் உள்ளிட்ட ஐந்து பேர் டெல்டா ப்ளஸ் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் இவர்களுக்கு இணை நோய் இருந்ததாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் இருவர் கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்கள் என்றும் இருவர் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்றும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மற்றொரு நபர் தடுப்பூசி செலுத்திக்கொண்டாரா இல்லையா என்பது தெரியவில்லை.

கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் சூழலில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கடந்த வாரம் தெரிவித்திருந்தார். சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களிடம் உரையாடிய அவர், கரோனா தொற்றின் மூன்றாம் அலையை சந்திக்க ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதிக ஆபத்தை ஏற்படுத்தும் டெல்டா ப்ளஸ் திரிபு

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆல்ஃபா வகை கரோனா தொற்று பரவி வந்த நிலையில், தற்போது மற்றொரு திரிபான டெல்டா வகை கரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது. 2020ஆம் ஆண்டு வூகான் நாட்டிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா தொற்றைக் காட்டிலும் இது ஆயிரம் மடங்கு சக்தி வாயந்ததாகக் கருதப்படுகிறது. இது இரண்டு மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஊட்டச்சத்து குறைபாட்டால் ஒரே மாவட்டத்தில் 49 குழந்தைகள் பலி!

ABOUT THE AUTHOR

...view details