தமிழ்நாடு

tamil nadu

மகாராஷ்டிராவில் அகமது நகர் பெயர் மாற்றம்.. முதலமைச்சர் ஷிண்டே உத்தரவு!

By

Published : May 31, 2023, 8:36 PM IST

அகமது நகரின் பெயரை அஹல்யா நகர் என மாற்றம் செய்து மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டு உள்ளார்.

Eknath Shinde
Eknath Shinde

அகமதுநகர் : மகாராஷ்டிரா மாநிலத்தின் அகமதுநகரை, அஹல்யா நகர் என பெயர் மாற்றம் செய்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், அகமது நகரை பெயர் மாற்றம் செய்து அஹல்யா நகர் என அறிவிக்கக் கோரி முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை அறிவுறுத்த உள்ளதாக கூறிய சில மணி நேரங்களில் பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருப்பது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிராவில் இஸ்லாமிய பெயர் கொண்ட நகரங்கள், சாலைகள் அடிக்கடி பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு இறுதியில் அவுரங்கபாத் மற்றும் ஒஸ்மானாபாத் ஆகியப் பெயர்கள் நீக்கப்பட்டு சத்ரபதி சாம்பாஜி நகர் மற்றும் தாராஷிவ் என பெயர் மாற்றி முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.

இந்நிலையில், அகமது நகரின் பெயர் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக அஹல்யா நகர் என அழைக்குமாறும் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில், அகமது நகரை, இனி அஹல்யா நகர் என பெயர் மாற்றம் செய்யுமாறு மாவட்ட நிர்வாகம், மற்றும் மாநகாரட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

அகமது நகரின் பெயரை அஹல்யா நகர் என மாற்றக் கோரி பாரதிய ஜனதா கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் அதன் காரணமாகவே முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பெயர் மாற்றியதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அப்போதைய மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவுக்கு அகமது நகரை பெயர் மாற்றக் கோரி பாஜக தலைவர் போபிசந்த் படல்கர் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக பேசிய மகாராஷ்டிர கல்வி அமைச்சர் தீபக் கேசர்கர், "18ஆம் நூற்றாண்டில் மால்வாவின் ராணி அஹல்யா பாய் ஹோல்கரின் நினைவாக அகமது நகரை புண்யஷ்லோக் அஹல்யா தேவி நகர் என பெயர் மாற்றம் செய்யக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து கடந்த 2022 ஆண்டு டிசம்பர் மாதம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் அகமது நகரின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது" என்றார்.

அஹல்யா பாய் ஹோல்கர் அகமது நகரின் சௌண்டி கிராமத்தில் பிறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது நினைவாக அகமது நகருக்கு அஹல்யா நகர் பெயர் சூட்டுமாறு தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அகமது நகரின் பெயரை மாற்றம் செய்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்து உள்ளார்.

அதேநேரம் இஸ்லாமிய நகரின் பெயர்களை பாஜக கூட்டணி அரசு திட்டமிட்டு பெயர் மாற்றம் செய்து வருவதாக பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க :இந்திய பொருளாதார வளர்ச்சியின் நிலை என்ன? ஜிடிபி ஆய்வறிக்கை வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details