மும்பை:மகாராஷ்டிரா மாநிலம் பன்வேல் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) செயல்பாட்டாளர்கள் 4 பேரை மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்புப் படை கைது செய்துள்ளனர். இதுகுறித்து அதன் அலுவலர்கள் கூறுகையில்,
“இந்திய அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த இரண்டு செயல்பாட்டாளர்கள், பன்வெல்லில் சில தொழிலாளர்களின் சந்திக்கவுள்ளதாக மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, மும்பையில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள பன்வெல் என்ற இடத்தில் எங்கள் குழு சோதனை நடத்தி, நான்கு பிஎஃப்ஐ ஆர்வலர்களை கைது செய்தது.
விசாரணைக்குப் பிறகு, கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் 10வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.