புனே:மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஊர்லி காஞ்சன் என்னும் பகுதியில் 12ஆம் வகுப்பு படித்துவரும் மாணவன் அவரது தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த காரணத்திற்காக இன்று (பிப். 17) கைது செய்யப்பட்டார். இதுகுறித்து புனே போலீசார் கூறுகையில், ஊர்லி கஞ்சன் பகுதியை சேர்ந்தவர் ஜமீர் ஷேக். இவரது மனைவி தஸ்லிம் ஜமீர் ஷேக் மற்றும் 12ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மகனுடன் வசித்து வந்தார்.
இதில், தஸ்லிம் ஜமீர் ஷேக், பிப்ரவரி 15ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், சம்பவயிடத்துக்கு விரைந்து உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இவரது உடற்கூராய்வின் முடிவில் மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது கொலையாக இருப்பதற்கான அறிகுறிகள் உடலில் இருப்பதாக தெரிவித்தனர்.
இதனடிப்படையில், ஜமீர் ஷேக் மற்றும் அவரது 17 வயது மகனிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினோம். முதலில் ஜமீர் ஷேக்கிடம் நடத்திய விசாரணையில் அவர், தனது மனைவி தற்கொலை செய்துகொண்ட நேரத்தில் தான் நமாஸ் செய்ய சென்றுவிட்டதாகவும், வீடு திரும்புகையில் அவரது உடலை மட்டுமே பார்த்தாகவும் தெரிவித்தார்.