தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் செல்பி எடுக்க முயன்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு - selfie deaths in TamilNadu

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆற்றின் அருகே செல்பி எடுக்க முயன்ற ஒரு பெண் மற்றும் சிறுமி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மகாராஷ்டிராவில் செல்பி எடுக்க முயன்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
மகாராஷ்டிராவில் செல்பி எடுக்க முயன்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

By

Published : Oct 16, 2022, 8:39 AM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள வைதர்னா பாலத்தின் அருகே இருக்கும் ஆற்றங்கரையோரத்தில், நேற்று (அக் 15) நான்கு பெண்கள் செல்பி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக நான்கு பேரும் நீரினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் இருவர் அங்கிருந்தவர்களால் காப்பாற்றப்பட்டனர்.

அதேநேரம் நீலா தாமிசிங் தாஸ்னா (24) மற்றும் 15 வயது சிறுமி ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுதொடர்பாக மாண்ட்வி காவல் நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளர் பிரஃபுல்லா வாக் கூறுகையில், “நீரில் மூழ்கிய இருவர் அங்கிருந்தவர்களால் காப்பற்றப்பட்டனர். மேலும் இருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். அவர்களின் உடல்கள் தீயணைப்பு படையினர் மூலம் மீட்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:செல்பி மோகத்தால் பறிப்போன உயிர்கள்... செம்பரம்பாக்கம் ஏரியில் 2 மாணவர்கள் உயிரிழப்பு...

ABOUT THE AUTHOR

...view details