நாட்டில் கரோனா தடுப்பூசித் திட்டம் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. அனைத்து மாநிலங்களும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என முனைப்புக் காட்டிவருகின்றன.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் தானே மாநகராட்சி நிர்வாகம் தனது ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ளவில்லை என்றால், அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என உத்தரவிட்டுள்ளது.
தங்களின் தடுப்பூசி சான்றிதழை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிர்வாகம், முதல் டோஸ் செலுத்தியவர்கள் முறையான நேரத்தில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.