மகாராஷ்டிராவிலுள்ள நாக்பூர் டிவிசன் கிராட்ஜுவேட்ஸ் தொகுதிக்கு நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை தொடங்கியது. இன்று(டிச.3) மதியம் வரை நீடித்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபிஜித் வஞ்சாரி சுமார் 18,910 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் அபிஜித் வஞ்சாரி 61,701 வாக்குகளை பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் சந்தீப் ஜோஷி 42,791 வாக்குகளை மட்டுமே பெற்றார். சுமார் 58 ஆண்டுகளாக பாஜக வசம் இருந்த இந்தத் தொகுதியை காங்கிரஸ் தற்போது கைபற்றியுள்ளது.