நாக்பூரில் உள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதபதி எஸ்.ஏ. பாப்டே வீட்டின் பாதுகாப்புக்காக மகாராஷ்டிரா அரசு கூடுதலாக 1.77 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. மாநில சட்டப்பேரவையில் சட்டம் மற்றும் நீதித்துறை விடுத்த கோரிக்கையின் பேரில் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கியதற்கான காரணத்தை அமைச்சரவை இன்னும் வெளியிடவில்லை. மாநில பொதுப்பணித்துறை விடுத்த கோரிக்கையின் பேரில் ஆளுநர் மாளிகையின் கட்டுமான பணிகளுக்காக 5.75 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுளளது. அதேபோல், நீதிபதிகள் வசிக்கும் வீட்டின் கட்டுமான மற்றும் இதர பணிகளுக்காக 6.16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.