மும்பை:மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது நிலவி வரும் பதற்றமான அரசியல் சூழலில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா சட்டப்பேரவை உறுப்பினர்கள் மகாராஷ்டிர ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில், 'சட்டப்பேரவைக்குழுத் தலைவராக ஏக்நாத் ஷிண்டே தொடர்கிறார். தலைமைக் கொறடாவாகத் தேர்வு செய்யப்பட்டிருந்த சுனில் பிரபுவை நீக்கி பாரத் கோகவாலே என்பவர் தலைமைக் கொறடாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாயன்று நடத்தப்பட்ட சட்டப்பேரவை கட்சிக் கூட்டத்தில் 4 சுயேச்சைகள் உட்பட குறைந்தது 34 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கையெழுத்திட்டதாக' அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.