பாதிக்கப்பட்ட பெண்ணும் குற்றவாளியான அவினாஷும் லிவின் உறவில் இருந்துள்ளனர். அப்போது அவர்கள் இருவருக்குள்ளும் தகராறு இருந்துவந்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக இருசக்கர வாகனத்தில் இருவரும் தங்களது சொந்த ஊருக்குப் பயணம் செய்துள்ளனர். வாகனத்தை ஒரு இடத்தில் நிறுத்திய அவினாஷ் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அப்பெண்ணின் மீது வீசியுள்ளார்.
லிவின் உறவில் விரிசல்... ஆசிட் வீசி பெட்ரோல் ஊற்றி கொளுத்திய காதலன்! - லிவின் உறவில் விரிசல்
மகாராஷ்டிரா அருகே 22 வயது இளம்பெண்ணின் மீது ஆசிட் வீசியது மட்டுமல்லாமல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![லிவின் உறவில் விரிசல்... ஆசிட் வீசி பெட்ரோல் ஊற்றி கொளுத்திய காதலன்! Acid attack victim dies after 16-hr fight for life](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9554350-861-9554350-1605473796696.jpg)
Acid attack victim dies after 16-hr fight for life
அதோடு மட்டுமல்லாமல் வாகனத்திலிருந்து பெட்ரோலை எடுத்து அப்பெண்ணின் மீது ஊற்றி தீயையும் வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். உயிருக்கும் போராடிய நிலையில் அப்பெண்ணை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் 16 மணி நேரமாக உயிருக்குப் போராடிய நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் துரதிருஷ்டவசமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வழக்குப் பதிவுசெய்த காவல் துறையினர் குற்றவாளி அவினாஷை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.