தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தானே தீ விபத்தில் தீயணைப்பு வீரர் உட்பட 7 பேர் காயம் - தீயணைப்பு வீரர் உட்பட 7 பேர் காயம்

தானேவில் சிலிண்டர் வெடி விபத்தால் ஏற்பட்ட தீயினைக் கட்டுப்படுத்தச் சென்ற தீயணைப்பு வீரர்கள் உட்பட ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Maha: 7 injured in explosion after fire at shop in Thane
Maha: 7 injured in explosion after fire at shop in Thane

By

Published : Jan 10, 2021, 12:13 PM IST

மும்பை:மகாராஷ்டிரா மாநிலம், தானே நகரில் உள்ள வாக்லே எஸ்டேட் பகுதியில் ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது.

இந்தக் கடையில் நேற்று இரவு(ஜனவரி 09) 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து அருகிலுள்ள இரண்டு வீடுகளுக்கும் பரவியது.

இந்த பயங்கர தீ விபத்தினைத் தடுக்க இரண்டு தீயணைப்பு இயந்திரங்கள், பல மீட்பு வாகனங்கள் மற்றும் பிராந்தியப் பேரிடர் மேலாண்மைப் பிரிவினர் விரைந்தனர்.

இந்நிலையில், தீயினை அணைக்க முற்பட்ட போது, வீட்டிலிருந்த சிலிண்டர் வெடித்தலில் இரண்டு தீயணைப்பு வீரர்கள், வாகன ஓட்டுநர், அப்பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் என ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த தீ இன்று(ஜனவரி 10) அதிகாலை 2.30 மணியளவில் அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

இதையும் படிங்க : கன்னியாகுமரியில் தீ விபத்து; ரூ.2 கோடி பொருள்கள் சேதம்!

ABOUT THE AUTHOR

...view details