இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்துவருகின்றது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த கடலோர மாவட்டமான ராய்காட்டில் உள்ள மகத் பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த இரு நாள்களில் மட்டும் மகாராஷ்டிராவில் மழை காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 129 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் அதிகளவிலான உயிரிழப்பு ராய்காட், சத்தாரா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளன. வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் தீவிரமாக செயல்பட்டுவருகின்றன.
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி மழை பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். ராய்காட் நிலச்சரிவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர், மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராகவுள்ளதாக உறுதியளித்தார்.
இதையும் படிங்க:முதல் பருவத்தேர்வு ரத்து: புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவிப்பு