ஹைதராபாத் : தேசிய தலைநகர் டெல்லியில் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் அமைந்துள்ளது. நுணுக்கமான கலை நுட்பத்துடன், அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ள இந்தப் பள்ளிவாசல் வளமான இஸ்லாமிய கட்டடக் கலைக்கு ஒரு சிறந்த சான்றாகும். வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பள்ளிவாசல் காலப்போக்கில் பெரிதும் கவனிக்கப்படவில்லை.
இது ஒருகாலத்தில், ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலை போரில் பல போராட்ட வீரர்களுக்கு புகழிடமாக விளங்கியது. இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் பின்னி பிணைந்தது. இந்தப் பள்ளிவாசலில் 1662ஆம் ஆண்டுக்கு பிறகு பொதுமக்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து வரலாற்று ஆய்வாளரான ராணா சஃப்வி நம்மிடம் கூறுகையில், “1857 காலக் கட்டம்.. ஆங்கிலேயருக்கு எதிராக சிப்பாய் கலகம் வெடித்த நேரம் அது. அப்போது, நமது வீரர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக விடுதலைப் போரில் ஈடுபட்டனர். இதில் பெரும்பாலும் வீரர்கள் இங்கு தங்கியுள்ளனர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பெரும்பாலான போராட்டங்களும் இங்குதான் நடைபெற்றன.
இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை
இதையறிந்த ஆங்கிலேய அரசு இந்த மசூதியை கைப்பற்றியது. தொழுகையில் ஈடுபட தடை விதித்தது. காலப்போக்கில் 1962ஆம் ஆண்டுக்கு பிறகு, இங்கு நமாஸ் செய்ய பள்ளிவாசல் திறக்கப்பட்டது” என்றார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போரில் மட்டுமல்ல, 1947 இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போதும் இந்தப் பள்ளிவாசல் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
பாகிஸ்தான் என்னும் நாடு உதயமான போது அங்கு செல்லலாமா? வேண்டாமா எனப் பல இஸ்லாமியர்கள் இங்குதான் முக்கிய முடிவுகளை எடுத்தனர். இந்த அரசியல் இக்கட்டான நிலையில் ஜாமியா பள்ளிவாசலில் நிகழ்ந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் உரை அழியாத புகழ் பெற்றது. ஆம்.. “நாங்கள் இஸ்லாமியர்கள்தான். ஆனால் இஸ்லாமியர்களுக்கு இந்தியாவை விட சிறந்த ஒரு நாடு இருக்க முடியாது. எங்களுக்கு முஸ்லீம் லீக் தேவையில்லை. நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இந்தியாவோடு பயணிப்போம்” என்றார்.
அபுல் கலாம் ஆசாத் உரை
அபுல் கலாம் ஆசாத் உரையை நினைவுக் கூர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராணா சஃப்வி, “1947ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மௌலானா அபுல் கலாம் ஆசாத் வரலாற்று சிறப்புமிக்க உரையை இங்கு நிகழ்த்தினார். இந்த உரையின்போது ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போரில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை அபுல் கலாம் ஆசாத் நினைவுக் கூர்ந்தார்.
மேலும் ஏக இறைவன் அல்லா இந்த உலகையை பள்ளிவாசலாக மாற்றியுள்ளான். ஆகவே இஸ்லாமியர்கள் இங்கிருந்து வேறு இடத்துக்கு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தினார்” என்றார்.
மற்றொரு வரலாற்று சிறப்பு
இந்த ஜாமியா மசூதியில் மற்றொரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வும் நடந்துள்ளது. பண்டிட் ஷ்ரதானந்த் சரஸ்வதி இந்து-இஸ்லாமியர் ஒற்றுமைக்காக இங்கு நற்செய்தி ஒன்றை வழங்கியுள்ளார். காவி உடை அணிந்து அவர் இந்து-இஸ்லாமிய சகோதரத்துவ நல்லுறவுக்காக அவர் அளித்த நற்செய்தி நினைவுகள் இன்றளவும் இப் பள்ளிவாசலில் காணலாம்.