தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வைர மோதிரம் மிஸ்ஸிங்... ஜெட் வேகத்தில் கண்டுபிடித்த மதுரை காவல் துறை! - madurai diamond news

காணாமல் போன தங்க மோதிரத்தை, 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்த மதுரை காவல் துறைக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

madurai
மதுரை காவல் துறை

By

Published : Aug 3, 2021, 9:34 PM IST

மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மோகித் அஜித், நிச்சயதார்த்தத்தில் மணப்பெண்ணுக்கு அணிவிப்பதற்காக மதுரை அண்ணாநகரில் உள்ள நகைக்கடையில் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வைரம் பதித்த தங்க மோதிரத்தை வாங்கியுள்ளார்.

தொடர்ந்து, மேலமாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் துணி எடுத்துவிட்டு திரும்பும் போது வைர மோதிரத்தை தவறவிட்டுள்ளார்.மோதிரம் காணாமல் போனதால் பதறிய மோகித், உடனடியாக திடீர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து, மதுரை மாநகர காவல் துணை ஆணையர் உத்தரவின் அடிப்படையில் தொலைந்த வைர மோதிரத்தை கண்டுபிடிக்க சார்பு ஆய்வாளர் மரியசெல்வம், சிறப்பு சார்பு ஆய்வாளர் கணேசன் தலைமையிலான தனிப்படை களமிறங்கியது. உடனடியாக, சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், மதுரை செல்லூர் அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் காணாமல் போன வைர மோதிரத்தை எடுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக, அவரிடமிருந்து வைர மோதிரம் கைப்பற்றப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மதுரை மாநகருக்குள் காணாமல் போன வைர மோதிரத்தை 24 மணி நேரத்தில் மிக துரிதமாகவும் சாதூர்யமாகவும் கண்டுபிடித்து கொடுத்த தனிப்படைப் பிரிவு சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்களை மதுரை மாநகர காவல் துறை உயர் அலுவலர்கள் பாராட்டினர்.

இதையும் படிங்க:பேஸ்புக்கில் சிறுமி புகைப்படம்... மிரட்டிய முன்னாள் அதிமுக நிர்வாகி கைது!

ABOUT THE AUTHOR

...view details