தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிய நாடாளுமன்றத்தில் காத்திருக்கும் அதிர்ச்சிகள்.. டெல்லியில் மதுரை எம்.பி பரபரப்பு பேட்டி! - Nandalal Bose

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பார்வையிட்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பாஜக அலுவலகத்தை போல புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்துள்ளதாகவும், ஓவியங்கள், சிலைகள் அனைத்து பாஜகவின் கொள்கைகளையே பேசும் வகையில் உள்ளதாகவும் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 2, 2023, 7:43 PM IST

டெல்லி: டெல்லியில் நேற்றைய தினம் (ஜூன் 01) ரயில்வேத்துறையின் ஆலோசனை கூட்டமும் கல்வித்துறையின் நிலைக்குழு கூட்டமும் நடைபெற்றது. இந்த இரண்டு கூட்டங்களில் பங்கேற்க மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் டெல்லி சென்றிருந்தார். அப்போது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்பொது பேசிய அவர், "புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பார்வையிட்டது பெரிய அதிர்ச்சியை உருவாக்கியது. குறிப்பாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள காட்சிகள் முழுக்க சனாதனத்தை விளக்கும் காட்சிகளாகவும் சமஸ்கிருதத்தை போற்றும் காட்சிகளாகவும் தான் இருக்கிறது. ஜனநாயகம், மதசார்பின்மை, தேச விடுதலை போராட்டம் ஆகியவற்றின் எந்த அடையாளங்களும் அதற்குள் இல்லை. இன்னும் சொல்லப்போனால் பாஜகவின் அலுவலகத்தை போல புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைது உள்ளனர் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் ஒரு கையில் தந்தம் ஏந்தியும் மற்றோரு கையில் ஒரு விரலை நீட்டியபடி கோபமான நிலையில் 30 அடி உயரத்தில் சாணக்கியனின் உருவத்தை மிக பிரமாண்டமாக வடிவமைது உள்ளனர். சாணக்கியனுக்கும் ஜனநாயக சிந்தனைக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? அரசியல் சாசனம் போற்றப்படவேண்டிய இடத்தில் அஸ்த்தசாஸ்திரம் போற்றப்படவேண்டிய தேவை என்ன? என்பது மிக முக்கியமான கேள்வி எழுப்பினார்.

மேலும், மைய வளாகத்தில் சுமார் 250 அடி நீளத்தில் மிக பிரமாண்டமாக விஷ்ணு புரானத்தில் வருகிற, பார்க்கடலை கடையும் காட்சி வார்ப்பு வடிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேருமலையை மத்தாக ஆதிஷேஷனை கையிராக கொண்டு தேவர்கள் ஒருபுறமும் அசுரர்கள் ஒருபுறமும் பார்க்கடலை கடையும் இந்த காட்சிக்கும் பாராளுமன்றத்திற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? இன்னும் சொல்லப்போனால் அப்படிப்பட்ட மையமான இடத்தில் பிரிட்டிசாருக்கு எதிராக இந்திய மக்கள் நடத்திய வீரம் மிக்க போராட்டதை காட்சி படுத்த வேண்டும். ஆனால் அப்படி காட்சிபடுத்தினால், தங்களது துரோக வரலாறு நினைவுபடுத்தப்படும் என்ற அச்சத்தில் புரானங்களை காட்சிபடுத்தியுள்ளனர். என்று சாடினார்.

அதோடு, அசலான அரசியல் சாசனத்தினுடைய நூலின் கோட்டோவியத்தை மரியாதைக்குரிய நந்தலால் போஸ் வரைந்துள்ளார். அதில் 22 ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது அந்த 22 ஓவியங்களும் சுமார் 10,000 ம் ஆண்டுகால இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றை நினைவுபடுத்தவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை நினைவுபடுத்துவதும், இந்திய அரசியலின் பரிமாணத்தை நினைவுபடுத்துவதுமாக வரையப்பட்டுள்ள நந்தலால் போஸினுடைய 22 ஓவியங்கள்.

அதில் 16 ஓவியங்களை நாங்கள் காட்சிபடுத்த மெருகூட்டியிருக்கிறோம் என்று சொல்லி 16 காட்சிகளை உருவாக்கியிருக்கிரார்கள். நந்தலால் போஸினுடைய முதல் படம் சிந்து சமவெளி நாகரிகத்தின் முத்திரை என்று சொல்லக்கூடிய அந்த எருதில் இருந்து துவங்கும். ஆனால், இவர்கள் வரைந்திருக்கும் முதல் படம் தவம் இருக்கும் ஒரு முனிவரில் இருந்து துவங்குகிறது. வேதகாலத்தில் இருந்து இந்திய வரலாறு கட்டமைக்கப்பட்டு ராம கதை, மஹாபாரதம் என்பதெல்லாம் நந்தலால் போஸினுடைய ஓவியத்திலும் இருக்கிறது. ஆனால் அதெல்லாம் காவிய காலம் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவர்கள் அவையெல்லாம் வரலாறு என்று வரையறுத்திருகிறார்கள்" என்று அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை கூறினார்.

இதையும் படிங்க:2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்தப்போவது எப்படி? - அமெரிக்காவில் வியூகத்தை உடைத்த ராகுல்காந்தி!

ABOUT THE AUTHOR

...view details