தமிழ்நாடு

tamil nadu

மத்திய பிரதேசத்தில் யார் ஆட்சி? தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் சொல்வது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 6:56 PM IST

Updated : Nov 30, 2023, 9:35 PM IST

Madhya Pradesh Election Exit Poll Results 2023: ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நிறைவு பெற்ற நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை விரிவாக பார்க்கலாம்..

Etv Bharat
Etv Bharat

போபால் : 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்திற்கு கடந்த நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவைப்படும் நிலையில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக மற்றும் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அதைத் தொடர்ந்து பகுஜான் சமாஜ் கூட்டணி, ஆசாத் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ஜனதா தள் உள்ளிட்ட கட்சிகளும் இம்முறை தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், முக்கிய போட்டி காங்கிரஸ் - பாஜக இடையே நிலவுகிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் (பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 116):

பாஜககாங்கிரஸ்மற்றவை
CNN11211305
janki Baat100 - 123102 - 12505
Republic118 - 13097 - 10702
TV 9 106 - 116 113 - 121 06

கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த மத்திய பிரதேசம் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், இடையில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. அது முதலே மாநிலத்தில் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2023 சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் அதையே கூறுகின்றன. ஆட்சியை கைப்பற்றுவதில் பாஜக - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. களத்தில் பகுஜான் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் உள்ள நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு பின்னரே மாநிலத்தின் முழு விபரமும் தெரியவரும்.

இதையும் படிங்க :ஓய்ந்தது 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்.. ஆட்சியை இழக்கப் போவது யார்? கைப்பற்றப்போவது யார்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்!

Last Updated : Nov 30, 2023, 9:35 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details