சிவ்புரி: மத்தியப்பிரதேச மாநிலம், போபால் மாவட்டம், பிதுல் பகுதியைச் சேர்ந்தவர், தன்வி தபாண்டே. சிவபுரி மாவட்டத்தில் உள்ள கோட் என்ற கிராமத்தில் ஒப்பந்தப் பணியில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்த தன்வி தபாண்டே அதற்காக சிகிச்சைப் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக தன் சொந்த ஊருக்கு பணி மாறுதல் கேட்டு தன்வி விண்ணப்பித்து உள்ளார். நீண்ட நாட்களாகியும், தன்வி தபாண்டேவுக்கு பணி மாறுதல் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செவிலியர் விடுதியில் தன்வி தற்கொலை செய்து கொண்டார்.
பணிக்கு அழைத்துச்செல்ல வந்த மருத்துவப் பணியாளர், அறையில் சடலமாக கிடந்த தன்வியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சிகிச்சைப் பலனின்றி தன்வி உயிரிழந்தார். இந்நிலையில், தன்வி உயிரிழந்து 65 நாட்கள் கடந்த நிலையில் அவரது பணி மாறுதலுக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
போபால் அடுத்த ரெய்சன் பகுதிக்கு அவரை பணி மாறுதல் செய்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. செவிலியர் தன்வி உயிரிழந்து 65 நாட்கள் கடந்த நிலையில், பணி மாறுதலுக்கு அனுமதி அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:சத்தீஸ்கர்: நக்சல்கள் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் வீரமரணம்