மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எம்ஏ-வின் மகன் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பெண்கள் காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ளது. தலைமறைவாகவுள்ள கரன் மோர்வலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுகுறித்து காவல் அலுவலர் ஒருவர் கூறுகையில், "கடந்த வெள்ளிக்கிழமை, காங்கிரஸ் எம்எம்ல்ஏ-வின் மகன் மீது இளம்பெண் ஒருவர், பாலியல் புகார் அளித்தார். இருவரும் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். அவ்வப்போது, இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பல முறை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.