தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒமைக்ரான் அச்சுறுத்தல்: மாநிலங்களில் அடுத்தடுத்து இரவு ஊரடங்கு - எந்தெந்த மாநிலங்களில் இரவு ஊரடங்கு

மத்திய பிரதேச மாநிலத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

night curfew imposed in states
night curfew imposed in states

By

Published : Dec 23, 2021, 10:27 PM IST

போபால்: தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான், வெறும் இரண்டு வாரத்தில் 100 நாடுகளுக்கும் மேல் பரவிவிட்டது. இந்தியாவில் கடந்த வாரத்தில் 30 பேருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் 236 பேருக்கு உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிரா, தெலங்கானா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இதனால் மாநில அரசுகள் தீவிர ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முன்னதாக ஒமைக்ரான் காரணமாக குஜராத் மாநில அரசு அகமதாபாத், காந்திநகர், சூரத், ராஜ்கோட், வடோதரா, பாவ்நகர், ஜாம்நகர், ஜுனகர் ஆகிய நகரங்களில் நள்ளிரவு 1 மணி அதிகாலை 5 வரை இரவு ஊரடங்கை கடைபிடிக்க உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, மத்திய பிரதேச மாநிலத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். அதன்படி நாளை முதல் ஊரடங்கு தொங்குகிறது. மேலும் நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒமைக்ரான் தடுப்பு குறித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:ஒமைக்ரான் அச்சுறுத்தல்: குஜராத்தில் இரவு நேர ஊரடங்கு

ABOUT THE AUTHOR

...view details