இந்தியாவின் பாரத் பயோடேக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி மருந்து, பல்வேறு நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இலங்கை, வங்கதேசம், நேபாளம், மொரீஷியஸ் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இதுவரை கரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அந்த வரிசையில், சோமாலியா நாட்டிற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.