தமிழ்நாடு

tamil nadu

கேரள தங்கக் கடத்தல்; எம். சிவசங்கருக்கு ஜாமீன்

By

Published : Feb 3, 2021, 5:02 PM IST

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலர் எம். சிவசங்கருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

M Sivasankar
எம். சிவசங்கர்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்தவர் எம். சிவசங்கர். இவர் மீது தங்கக் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டு எழுந்த நிலையில், முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சிவசங்கர் மீது மூன்று வழக்குகள் பதிந்து தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை, சுங்கத்துறை விசாரணை நடத்திவருகிறது.

இந்நிலையில் மேற்கண்ட வழக்குகளில் பிணை கேட்டு சிவசங்கர் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சிவசங்கருக்கு பிணை வழங்கி கூடுதல் தலைமை நடுவர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'அமேசான் சிஇஓ பொறுப்பிலிருந்து விலகுகிறேன்' - ஜெஃப் பெசோஸ் திடீர் முடிவின் காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details