டெல்லி: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு, தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ், டெல்லி மன்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்குகள் தொடர்பாக பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னான்டஸ், நேரோ படோகியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, ரூ.3.5 கோடி மோசடி செய்த வழக்கில் கடந்த வாரம் சுகேஷை போலீசார் மீண்டும் கைது செய்தனர். இதையடுத்து அவரை 9 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சுகேஷ் அடைக்கப்பட்டுள்ள மன்டோலி சிறையில் இன்று (பிப்.23) சிறைத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.