சமீபத்தில் உத்தரப் பிரதேசம் மாநிலம், லக்னோவில் ஆவாத் கிராசிங்கில், கார் ஓட்டுநரை இளம்பெண் ஒருவர் சரமாரியாகத் தாக்கும் காணொலி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
22 முறை இளம்பெண் அறைந்தும், ஓட்டுநர் செய்வதறியாமல் அப்படியே நிற்பார். கார் தன் மீது மோதி விட்டதாகக் கூறி ஓட்டுநரை அப்பெண் தாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் ஓட்டுநர் அப்பெண்ணை இடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
இதனால், கார் ஓட்டுநர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து, தாக்குதல் நடத்திய இளம்பெண்ணை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை வலியுறுத்தும் விதமாக #ArrestLucknowGirl என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது.
இந்நிலையில், அதே லக்னோ பெண், பக்கத்து வீட்டுக்காரருடன் அற்ப காரணத்துக்காக சண்டையிடம் காணொலி தற்போது வெளியாகியுள்ளது.
லக்னோ இளம்பெண்ணின் புதிய காணொலி சர்வதேச ட்ரோன்களை ஈர்க்கும் வகையில் வீட்டிற்கு கறுப்பு நிறத்தில் பெயிண்ட் அடித்துள்ளதாக குற்றஞ்சாட்டிய அப்பெண், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், உடனடியாக மீண்டும் வேறு நிறத்தில் பெயிண்ட் அடிக்க வேண்டும் எனவும் இந்தக் காணொலியில் சண்டை போடுகிறார். இந்தக் காணொலி சில நாள்களுக்கு முன்பு எடுக்கப்பட்டிருந்தாலும், தற்போது வைரலாகியுள்ளது.
வீட்டின் சுவர் நிறத்தை மாற்றுமாறு லக்னோ பெண் சண்டையிட்டுள்ளது அவரின் மனநிலை சரியாக உள்ளதா என்ற சந்தேகத்தை பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கார் ஓட்டுநரை எகிறி எகிறி அடித்த இளம்பெண்...சிசிடிவியால் ட்விஸ்ட்