பன்னா:மத்திய பிரதேச மாநிலத்தில் வைரச் சுரங்கங்களுக்கு பெயர் பெற்றது பன்னா மாவட்டம். இந்த மாவட்டத்தின் புருஷோத்தம்பூரைச் சேர்ந்த கெண்டா பாய் என்ற பெண்மணி, கடந்த 27ஆம் தேதி வனப்பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்றார். அப்போது 4.39 காரட் மதிப்புள்ள வைரம் ஒன்று கிடைத்துள்ளது. அதனை அரசிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த வைரம் ஏலம் விடப்படும் என்றும், அதில் அரசின் ராயல்டி மற்றும் வரிகள் போக மீதமுள்ள பணம் கெண்டா பாயிடம் கொடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வைரம் சுமார் 20 லட்சம் ரூபாய் வரை ஏலம் போகும் என கூறப்படுகிறது.