தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிய ராணுவத் தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம் - இவரது பின்னணி என்ன?

இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராணுவத்தில் பொறியாளர் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

Manoj Pande
Manoj Pande

By

Published : Apr 18, 2022, 10:24 PM IST

டெல்லி: இந்திய ராணுவத் தளபதியாக உள்ள முகுந்த் நரவானே, வரும் 30-ம் தேதி ஓய்வு பெற உள்ளார்.

இந்த நிலையில் புதிய ராணுவத் தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். மனோஜ் பாண்டே மே 1-ம் தேதி ராணுவத் தளபதியாக பதவியேற்பார் எனப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் முன்னாள் மாணவரான லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே, 1982-ல் ராணுவத்தின் பொறியாளர்கள் படைப்பிரிவில் நியமிக்கப்பட்டார்.

இந்திய ராணுவத்தின் துணைத்தளபதியாகவும், இந்திய ராணுவத்தின் கிழக்குப் பிரிவு மற்றும் அந்தமான் - நிகோபார் கமாண்டராகவும் பணியாற்றியுள்ளார். ராணுவத்தில் 39 ஆண்டுகள் சேவையாற்றியவர். பொறியாளர் பிரிவைச் சேர்ந்த ஒருவர் ராணுவத்தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை என தெரிகிறது.

இதையும் படிங்க: 'மோடி உண்மை பேச மாட்டார், பேசவும் விடமாட்டார்' - ராகுல் காந்தி தாக்கு

ABOUT THE AUTHOR

...view details