தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 26, 2022, 10:38 PM IST

ETV Bharat / bharat

இந்திய ராணுவத்திற்கு புதிய தலைமை பொறியாளர் நியமனம்!

இந்திய ராணுவத்தின் புதிய தலைமை பொறியாளராக லெப்டினன்ட் ஜெனரல் அர்விந்த் வாலியா நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை பொறியாளர் ஹர்பல் சிங் வரும் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதை அடுத்து புதிய தலைமை பொறியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லெப்டினன்ட் ஜெனரல் அர்விந்த் வாலியா
லெப்டினன்ட் ஜெனரல் அர்விந்த் வாலியா

டெல்லி: இந்திய ராணுவத்தின் தலைமை பொறியாளராக லெப்டினன்ட் ஜெனரல் அர்விந்த் வாலியா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைமை பொறியாளராக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் ஹர்பல் சிங் வரும் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

இதையடுத்து புதிய தலைமை பொறியாளராக அரவிந்த் வாலியா பொறுப்பேற்க உள்ளதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1986ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த அர்விந்த் வாலியா, டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். மேலும் அகடாமியின் மதிப்பிற்குரிய விருதான வெள்ளிப் பதக்கத்தை அரவிந்த் வாலியா வென்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலைவன படைப்பிரிவு கமாண்டர் மற்றும் காஷ்மீர் பொறியாளர் படைப்பிரிவு கமாண்டர் உள்ளிட்டப் பல்வேறு பொறுப்புகளை அரவிந்த் வாலியா வகித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கர்நாடகாவில் முக கவசம் கட்டாயம் - நியூ இயர் பார்ட்டிகளுக்கு கெடுபிடி!

ABOUT THE AUTHOR

...view details