தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த காதல் ஜோடி! - காதல் தோல்வியால் தற்கொலை

உத்தரப்பிரதேசத்தில் காதலுக்கு இருவீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதல் ஜோடி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த காதல் ஜோடி!
மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த காதல் ஜோடி!

By

Published : Jan 4, 2023, 9:19 AM IST

Updated : Jan 4, 2023, 3:20 PM IST

ஹர்தோய்: உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள தடிவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில், ஒரு ஆணும் (21) பெண்ணும் (19) மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கிராமத்துக்கு விரைந்த காவல் துறையினர், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்த இருவரும் காதலித்து வந்துள்ளதாகவும், ஆனால் இருவீட்டார்களும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு துர்கேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

தற்கொலையை தவிர்த்திடுக

இதையும் படிங்க:பள்ளி பராமரிப்பு பணியில் ஈடுபட்ட 10 வயது சிறுவன் உயிரிழப்பு.. பெற்றோர் குற்றச்சாட்டு..

Last Updated : Jan 4, 2023, 3:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details