அமராவதி:ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்திலுள்ள சுரரெட்டிபாலம் அருகே ரயில் முன்பு பாயந்து காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டனர்.
கொப்போலு பகுதியைச் சேர்ந்த விஷ்ணுவர்தன் ரெட்டியும், வெங்கடேஸ்வர காலனியைச் சேர்ந்த நாகினேனியும் நீண்ட நாள்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், இருவரும் வெவ்வேறு சாதி என்பதால், இருவர் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.