தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கள்ளக்காதலுக்காக கூலிப்படையாக மாறிய பெண்... காதலிப்பது போல நடித்து கொலை..! - தயானந்

கர்நாடகா மாநிலத்தில் பெண் ஒருவர் திட்டமிட்டு இளைஞர் ஒருவரை காதல் வலையில் விழவைத்து கொடூரமான முறையில் கொலை செய்து அதை வீடியோ பதிவு செய்த சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலனை கொடூரமாக கொலை செய்து வீடியோ பதிவு.... கர்நாடகாவை சேர்ந்த பெண் கைது!
காதலனை கொடூரமாக கொலை செய்து வீடியோ பதிவு.... கர்நாடகாவை சேர்ந்த பெண் கைது!

By

Published : Jul 9, 2022, 1:13 PM IST

கர்நாடகா:மாநிலம் கலபுராகி எனும் இடத்தில் ஜூன் 24 ஆம் தேதி தயானந் எனும் இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் அந்தக் கொலையை செய்த பெண் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து காவல்துறையின் விசாரணையில் இந்த கொலை சம்பவம் குறித்த பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது.

துபாயில் பெயிண்டராக வேலை செய்த தயானந்தா (24) சில நாட்களுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். இவருடைய தொலைபேசிக்கு ஒரு பெண்ணின் அழைப்பு தவறுதலாக வந்துள்ளது. இருவரும் பேச ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து மூன்றே நாளில் இவரிடம் பேசி அந்த பெண் அம்பிகா தயானந்தை தன்னுடைய காதல் வலையில் விழவைத்துள்ளார்.

பின்பு இவரை கொலை செய்யும் நோக்கில் திட்டமிட்டு குறிப்பிட்ட இடத்திற்கு நேரில் அழைத்துள்ளார். உடனே தயானந்தும் இவரை பார்க்க சென்றுள்ளார். அப்போது அம்பிகாவின் கும்பல் ஒன்று அந்த இடத்திற்கு வந்து தயானந்தை அம்பிகாவுடன் சேர்ந்து கொலை செய்துள்ளது. மேலும் அம்பிகா இதை விடீயோ பதிவு செய்து தன்னுடைய காதலன் அனில் என்பவருக்கும் அனுப்பியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து காவல் துறை கொலையில் ஈடுபட்ட அம்பிகா மற்றும் அவருடைய கும்பல் ஆறு பேரையும் கைது செய்து தீவிர விசாரணை செய்துள்ளனர்.அதில் ஏற்கனவே அம்பிகா திருமணமானவர் என்றும் அவருக்கு பெண் குழந்தை ஒன்று இருப்பதும் தெரியவந்துள்ளது.

கூலிப்படையாக மாறிய அம்பிகா

இருப்பினும் இவர் தயானந்தாவின் உறவினர் அனில் என்பவரை முகநூல் மூலம் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலன் அனிலின் மனைவியுடன் தயானந்த் தகாத உறவில் இருந்தது இவருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அம்பிகா 3 லட்சம் ரூபாய் பணத்தை அனிலிடம் வாங்கிக் கொண்டு காதல் நாடகம் நடத்தி தயானந்தை கொன்று வீடீயோ பதிவு செய்து காதலன் அனிலுக்கு அனுப்பியதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படிங்க:துணையில்லா வாழ்வை தேர்வு செய்யும் இந்திய பெண்கள் - காரணம் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details