காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "பிரதமர் நரேந்திர மோடிக்கும், பி.எம். கேர் நிதி மூலம் தயாரிக்கப்பட்ட வென்டிலெட்டர்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. அவை;
- போலியான மக்கள் தொடர்பு,
- தனது வேலையை செய்வதில்லை,
- தேவையான நேரத்தில் காணாமல் போவது" என்றுள்ளார்.
பி.எம்.கேர் நிதி மூலம் நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை ஒழுங்காக பயன்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தணிக்கை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை விமர்சிக்கும் விதமாகவே ராகுல், இந்த ட்விட்டர் பதிவை மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:கரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து: டிஆர்டிஓ அறிமுகம்