தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லாரி கவிழ்ந்து விபத்து:  5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு - Traffic jam

கர்நாடகாவிலிருந்து தேங்காய் ஓடுகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி திம்பம் மலைப் பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

போக்குவரத்து பாதிப்பு
போக்குவரத்து பாதிப்பு

By

Published : Sep 30, 2021, 3:18 PM IST

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியிலிருந்து தேங்காய் ஓடுகளை ஏற்றிக்கொண்டு பெங்களூரு - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சரக்கு லாரி சென்றது. ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பகுதியில் சென்றபோது சரியாக ஏழாவது கொண்டை ஊசி வளைவில், கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் காவல் துறையினர், கவிழ்ந்த லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால், அதன்பின் வந்த வாகனங்கள் செல்ல வழியில்லாமல் வாகன ஓட்டிகள் தவித்துவந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

சுமார் காலை 5 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தால் சுமார் 5 மணி நேரம் வாகனங்கள் செல்லாமல் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்த காவல் துறையினர் போக்குவரத்தைச் சரிசெய்தனர்.

இதையும் படிங்க:லாரி சக்கரத்தில் சிக்கி உயிர்தப்பிய மூவர் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details