தெலுங்கானாவில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்ய ஒடிசா மாநிலம், பாலங்கிர் மாவட்டத்திலிருந்து 30 பேர் லாரியில் வந்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக கட்டுபாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காலா குமார் சுனா (20), க்ருபா சுனா (25), கோபால் தீப் (25), புத்தன் (25), ஹஸ்டா யாதவ் (25), பரமானந்த் (55) உள்ளிட்ட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஒடிசாவில் லாரி விபத்து: 6 பேர் பலி, 22 பேர் படுகாயம் - லாரி விபத்து
ஒடிசாவிலிருந்து தெலங்கானா நோக்கி வந்து கொண்டிருந்த லாரி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Odisha Lorry accident
மேலும் 22 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதையும் படிங்க:சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் கடத்தல், வழிப்பறி!