குஜராத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேலின், ஒற்றுமை சிலையை கட்டிய பிரபல சிற்பியும் பத்ம பூஷன் விருது பெற்றவருமான ராம் வி சுதார், தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் சிலையை கட்டவுள்ளார். இச்சிலை சர்தார் வல்லபாய் படேலின் சிலையை விட பெரியதாக அமையவுள்ளது.
சிற்பி ராம் வி சுதார் மற்றும் அவரது மகனான அனில் சுதார் இருவரும் இணைந்து இந்த சிலையினை கட்ட உள்ளனர்.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் சிலை குறித்து சுதார் கூறுகையில், “அயோத்தியில் கட்டப்படும் ராமர் சிலை 251 மீட்டர் உயரம் இருக்கும். இது 182 மீட்டர் உயரம் உள்ள வல்லபாய் படேலின் சிலையை விட 69 மீட்டர் உயரத்தில் அமையவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.