தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வடமாநிலங்களில் பெட்ரோல் பங்க்கில் குவியும் மக்கள்.. லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்! - பாரதிய நியாய சான்ஹிதா

Petrol pumps in Mumbai: லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தத்தால் வட மாநிலங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By PTI

Published : Jan 2, 2024, 1:39 PM IST

மும்பை: காலனித்துவ இந்திய தண்டனைச் சட்டங்களை மாற்றியமைக்கும் பாரதிய நியாய சான்ஹிதாவின் கீழ், ஆபத்தான விபத்தை ஏற்படுத்தும் வாகன ஓட்டுநர்கள், காவல் துறையினர் அல்லது ஏதேனும் ஒரு நிர்வாகத்தின் கீழான அதிகாரிகளுக்கு முறையான தகவல் தெரிவிக்காமல் ஓடிவிட்டால், அவர்களுக்கு 10 வருடம் வரை சிறைத் தண்டனையும், ரூ.7 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், இதற்கு நாடு முழுவதும் உள்ள வாகன ஓட்டுநர்களிடம் இருந்து, முக்கியமாக கனரக வாகன ஓட்டுநர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், நேற்று முதல் பெரும்பாலான வடமாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், வட மாநிலங்களின் பல பகுதிகளில் பெட்ரோல் தட்டுப்பாட்டு நிலவுகிறது.

குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை மற்றும் நாக்பூர் ஆகிய பெருநகரங்களில் இன்று காலை முதலே, வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்புவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அதேநேரம், சில இடங்களில் பெட்ரோல் தீர்ந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், பெட்ரோல் கொண்டு வரக்கூடிய லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், இந்த தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.

மேலும், இது குறித்து பெட்ரோல் டீலர் அசோஷியேசனின் தலைவர் சேட்டன் மோடி கூறுகையில், “நேற்று முதல் பெட்ரோல் சப்ளை செய்வது, லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தத்தால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பங்க்குகள் பெட்ரோல் இல்லாத நிலையில் காணப்படுகிறது.

மும்பையின் செவேரியில் உள்ள ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளுக்கு நான் சென்றேன். ஆனால், எரிபொருள் வைத்திருக்கும் லாரி ஓட்டுநர்கள், லாரியை இயக்க முன்வரவில்லை. மும்பையில் இருக்கும் 200 பெட்ரோல் பங்க்குகளில் 180 பெட்ரோல் பங்க்குகளுக்கு இதன் மூலமே எரிபொருள் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:இந்தியா - வங்கதேச எல்லையில் அதிகரிக்கும் போலி அடையாள அட்டை தயாரிப்பு..! என்ஐஏ அதிகாரி அதிர்ச்சி தகவல்..!

ABOUT THE AUTHOR

...view details