மகாராஷ்டிரா:நாக்பூரில் நடைபெற்ற மகாராஷ்டிராவின் குளிர்கால சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், லோக் ஆயுக்தா மசோதா 2022 நிறைவேற்றப்பட்டது. லோக் ஆயுக்தா மசோதாவை மகாராஷ்டிர மாநிலம் தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தியது. இது குறித்த தகவலை, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், குளிர்காலக் கூட்டத் தொடரில் தெரிவித்தார். அனைத்து அமைச்சர்களும் லோக் ஆயுக்தா மசோதா வரம்புக்குள் வருவார்கள்.
குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்பே, லோக்பால் மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதைப் போல, மகாராஷ்டிராவிலும் லோக் ஆயுக்தா சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அன்னா ஹசாரே தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.
கடந்த முறை மாநிலத்தில் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி இருந்தபோது, அன்னா ஹசாரே தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, சில பரிந்துரைகளை வழங்க இருந்தது. லோக்பால் முறையில் மகாராஷ்டிராவில் லோக் ஆயுக்தாவை அறிமுகப்படுத்த அன்னா ஹசாரே குழுவின் அறிக்கைக்கு, தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.