தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மக்களவை சபாநாயகருக்கு கரோனா உறுதி! - மக்களவை சபாநாயகர்

டெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

ஓம் பிர்லா
ஓம் பிர்லா

By

Published : Mar 21, 2021, 3:36 PM IST

கடந்த மார்ச் 19ஆம் தேதி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சில நாள்களுக்கு முன்பு, மத்திய அரசின் சுகாதார திட்ட முகாமை நாடாளுமன்றத்தில் அவர் திறந்து வைத்தார். கடந்த 24 மணி நேரத்தில், 43,846 பேருக்கு கரோனா இருப்பது உறுதியானது. இதன்மூலம், மொத்த எண்ணிக்கை 1,15,99,130ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details