தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய ஏழு உழ்பிரிவுகளைச் சார்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் எனப் பொதுப் பெயரிடும்படி மத்திய அரசுக்குத் தமிழ்நாடு அரசு பரிந்துரைசெய்தது.
தேவேந்திர குல வேளாளர் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல்! - தேவேந்திர குல வேளாளர் மசோதா
17:59 March 19
தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்ற சட்ட திருத்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு அரசின் இந்தப் பரிந்துரையை ஏற்று, ஏழு பட்டியலின உள்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க வழிசெய்யும் அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதாவை கடந்த மாதம் மத்திய அரசு மக்களவையில் தாக்கல்செய்தது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்படும் இந்தத் திருத்தம் தமிழ்நாட்டில் மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விவாதத்திற்குப் பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.